E-commerce வியாபாரம் என்பது இன்று பலருக்கும் ஒரு சிறந்த தொழில் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற மாபெரும் தளங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த தளங்களில் நமது பொருட்களைச் சரியாகப் பட்டியலிடுவது (Listing) தான் வெற்றிகரமான விற்பனைக்கான முதல் படியாகும்.

Flipkart Listing QC Failed

நீங்கள் மிகவும் ஆர்வமாக ஒரு புதிய பொருளை (Product) விற்பனைக்காக Flipkart seller dashboard-ல் listing upload செய்திருப்பீர்கள். “எப்போது நமது listing live ஆகும், எப்போது ஆர்டர்கள் வரத் தொடங்கும்” என்று dashboard-ஐயே ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று திரையில் ஒரு சிவப்புக் குறியீட்டுடன் Flipkart QC Failed என்ற alert வரும்.

Listing upload பண்ணினதும் ஏன் Live ஆகல? எதனால் இந்த பிழை வருகிறது? என்ன தவறு செய்தோம்? என்று பல sellers, குறிப்பாகப் புதிதாக ஆன்லைன் வியாபாரத்திற்கு வந்தவர்கள் மிகவும் குழப்பமடைவார்கள். ஆனால், இதைப் பார்த்து நீங்கள் சற்றும் பயப்படவோ அல்லது panic ஆகவோ தேவையில்லை. இதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன, இந்த தவறுகளை எவ்வாறு எளிமையாகக் கண்டுபிடித்துச் சரி செய்வது என்பதைப் பற்றி இந்த விரிவான பதிவில் தெளிவாகப் பார்ப்போம்.

Flipkart Quality Check Process

Flipkart QC Failed என்றால் என்ன? (Quality Check Process)

முதலாவதாக QC என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். நீங்கள் Product listing upload பண்ணின பிறகு, அது உடனடியாக வாடிக்கையாளர்களின் பார்வைக்குச் சென்றுவிடாது. Flipkart தரப்பில் ஒரு Quality Check (QC) process கட்டாயம் நடைபெறும்.

  • Upload: முதலில் நீங்கள் product listing upload செய்கிறீர்கள்.
  • Quality Check: Flipkart-ன் சிஸ்டம், நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் அவர்களின் விதிமுறைகள்படி (Guidelines) உள்ளதா எனச் சரிபார்க்கும்.
  • Check Failed / Pass: அந்த check pass ஆகவில்லையெனில், அது நிராகரிக்கப்படும்.
  • Not Live: இதன் விளைவாக உங்களுடைய Listing live ஆகாது.
How to fix QC failed in Flipkart

வாடிக்கையாளர்களுக்குச் சரியான மற்றும் தரமான தகவல்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே Flipkart இந்த விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுகிறது. அதனால் தான் உங்கள் listing-ல் Flipkart QC Failed வருகிறது!

உங்கள் Listing-ல் Flipkart QC Failed ஆக முக்கிய 6 காரணங்கள்:

வாடிக்கையாளர்களைக் குழப்பாமல் இருக்கவும், சரியான பொருளை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் Flipkart சில முக்கிய விஷயங்களை எதிர்பார்க்கிறது. அதில் நாம் செய்யும் 6 தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

Flipkart listing rejected reasons

காரணம் 1: Wrong Category / Wrong Product Details (தவறான வகைப்பாடு) உங்கள் Product ஒரு category-க்கு உரியதாக இருந்து, நீங்கள் அதை listing செய்யும் போது வேறொரு சம்பந்தமில்லாத category-ல் upload பண்ணினால் கண்டிப்பாகப் பிரச்சனை வரும். உதாரணமாக: நீங்கள் விற்பனை செய்வது ஆண்களுக்கான ஸ்போர்ட்ஸ் ஷூ (Men Sports Shoes) என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதை நீங்கள் தவறுதலாக ‘Women Heels’ (பெண்களுக்கான ஹீல்ஸ்) என்ற category-ல் upload செய்தால், சிஸ்டம் அதை உடனடியாக reject செய்துவிடும். சரியான product-ஐ சரியான category-ல் வைப்பது மிக மிக அவசியம்.

காரணம் 2: Title & Description Mismatch (தலைப்பு மற்றும் விவரங்களில் முரண்பாடு) உங்களுடைய பொருளின் Title (தலைப்பு), Description (விவரங்கள்) மற்றும் நீங்கள் வைத்துள்ள Image (படம்) எல்லாமே ஒரே product-ஐத் தான் குறிக்க வேண்டும். இவை மூன்றும் same product-ஐ match ஆகணும். உதாரணமாக: நீங்கள் ஒரு அழகான பட்டுப் புடவையின் (Cotton Silk Saree with Jari Border) image-ஐ வைத்துவிட்டு, அதற்கான Title மற்றும் Description-ல் ‘Women Kurti’ (Stylish Kurti for Women) என்று தவறான details போட்டால், உங்களுக்கு Flipkart QC Failed பிழை வந்துவிடும்.

Solve QC failed error in Flipkart

காரணம் 3: Poor Quality Images (தரமற்ற புகைப்படங்கள்) ஆன்லைன் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் பொருளைத் தொட்டுப் பார்க்க முடியாது; படங்களைப் பார்த்துத் தான் வாங்குவார்கள்.

  • Blurry image: மங்கலான அல்லது தெளிவில்லாத படங்களை வைப்பது.
  • White background இல்லாமை: முதல் படம் (Primary Image) கண்டிப்பாக Pure White Background-ல் இருக்க வேண்டும்.
  • Watermark / extra text: படங்களின் மீது கடையின் பெயர், வாட்டர்மார்க் அல்லது தேவையில்லாத வாசகங்கள் இருப்பது.
  • Product clearly தெரியாத image: பொருள் தெளிவாகத் தெரியாமல் இருட்டடிப்பாக்கவோ அல்லது வெட்டப்பட்டோ இருப்பது.

காரணம் 4: Mandatory Attributes Missing (கட்டாய தகவல்கள் விடுபடுதல்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருளைத் தேடும் போது Size, Color, Brand, Material போன்ற details-ஐ வைத்துத் தான் தேடுவார்கள். இந்த முக்கியமான Mandatory attributes-ஐ நீங்கள் fill பண்ணாமல் விட்டால் Flipkart QC Failed ஆகும். Image மற்றும் Attributes சரியாக இருந்தால் QC pass ஆவதற்கான chance மிக அதிகம்!

Flipkart QC check pass tips

காரணம் 5: Brand / Legal Issue (பிராண்ட் மற்றும் சட்டபூர்வமான சிக்கல்கள்)

  • Brand name mismatch: நீங்கள் approval வாங்கிய பிராண்ட் பெயருக்கும், listing-ல் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருப்பது.
  • Trademark / brand approval issue: முறையான அனுமதி இன்றி மற்ற பிராண்ட் பொருட்களை விற்பனை செய்வது.
  • Legal metrology details இல்லாமை: MRP, Packer details, Manufacturer details போன்ற சட்டப்பூர்வமான தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

காரணம் 6: Duplicate or Wrong Variation Listing (நகல் அல்லது தவறான வேரியேஷன்)

  • Same product repeated listing: ஒரே பொருளை மீண்டும் மீண்டும் listing செய்வது.
  • Size / color variations properly connect பண்ணாதது: வெவ்வேறு அளவுகள் (S, M, L) மற்றும் நிறங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் போடாமல், ஒரே listing-ன் கீழ் சரியாக இணைக்க வேண்டும். Correct branding மற்றும் unique & accurate listings தான் QC approve ஆகப் பெரிதும் உதவும்!

Flipkart QC Failed வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? (6 Points Summary)

Flipkart QC Failed ஆனா இனி panic ஆகாதீங்க! Dashboard-ல் Problem என்னவென்று கண்டுபிடிச்சு அதைக் correct பண்ணினா, listing live ஆகும். Upload பண்ணுவதற்கு முன்னாடி, இந்த 6 points-ஐ செக் பண்ணுங்க:

Flipkart product upload errors
  1. Title: Title correct & clear ஆக இருக்கிறதா? சரியான category choose பண்ணியிருக்கீங்களா?
  2. Images: Clear & guideline-க்கு ஏற்ற மாதிரி (White background) படங்கள் உள்ளதா?
  3. Description: Complete & accurate ஆக இருக்கிறதா? Title, image, description மூன்றும் ஒரே product-ஐ match ஆகிறதா?
  4. Attributes: Mandatory attributes எல்லாமே fill பண்ணியாச்சா?
  5. Brand: Correct-ஆக select பண்ணியாச்சா? Brand & legal details செக் பண்ணுங்க.
  6. Compliance: Policy & guidelines follow பண்ணியாச்சா? Duplicate listing-ஐ தவிர்த்துவிட்டீர்களா?

இந்த 6 points check பண்ணினா QC pass chance அதிகம்.

“Correct Today, Live Tomorrow!” – உங்கள் பிழைகளை இன்று திருத்துங்கள், நாளை உங்கள் வியாபாரத்தை வளர்க்கத் தொடங்குங்கள். ஒருமுறை இந்த வழிமுறைகளைச் சரியாகப் பழகிவிட்டால், பின்பு நீங்கள் எந்த சிரமமுமின்றி ஆயிரக்கணக்கான பொருட்களைப் பட்டியலிட முடியும்.